பழனி தைப்பூசம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்
பழனி தைப்பூசம் ஐந்தாம் நாள் முன்னிட்டு அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.
அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் ஐந்தாம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் இன்று தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து கிரிவலம் பாதையில் குவிந்து வருகின்றனர்.
மலைக்கோவிலுக்கு சென்று வர ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது தரிசனத்திற்கு மேலே செல்ல குடமுழக்கு நிலவரங்கம் வழியாகவும் தரிசனம் முடித்து கீழே இறங்க படிப்பாதை வழியாகவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு தரிசன கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கூட்டம் அதிகம் உள்ள காரணத்தால் பக்தர்களை கயிறு கட்டி 500க்கு பக்தர்கள் மட்டும் மேலே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர் நாளை ஆறாம் நாள் திருவிழாவில் ஊர் கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வும் அதை தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது 7 நாள் திருவிழாவில் திருத்தேர் நிகழ்வும் நடைபெற உள்ளது.