in

32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம் நீலாயதாட்சி அம்மன் கோயில் முகப்பிலிருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மங்கள வாத்தியம், கேரள செண்டி மேளம், தப்பட்டம், மயிலாட்டம், கதகளி, காளி நடனம் என நாகையில் விநாயகர் சதுர்த்தி விழா கலை கட்டியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலில் 1 வருட காலமாக உருவாக்கப்பட்ட 32 அடியில் பிரம்மாண்ட அத்தி விநாயகர் சுவாமி 1200 கனஅடி அத்தி மரத்தை சேகரித்து 32 அடி உயரமும் 18 அடி அகலமும் கொண்ட அத்தி விநாயகர் சுவாமி சிலையை உருவாக்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக 32 அடி உயரத்தில் 16 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள அத்தி விநாயகரின் பிரம்மாண்ட சிலை 2022 லிருந்து விநாயகர் சதுர்த்தி அன்று நகர்வலம் செல்கிறது. இந்த ஆண்டும் 3வது ஆண்டாக 32 அடிய உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் முன்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விஸ்வரூப விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து இரவு 32 அடி உயர அத்திமரத்திலான விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது முதன் முதல் கடவுள் விநாயகருக்கு அங்கு ஆயிரம் கணக்கான தேங்காய்கள் பக்தர்களால் உடைக்கப்பட்டது.

நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் சென்றடையும் அடுத்து, 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை படகில் கொண்டு சென்று வெட்டாற்றில் கரைக்கப்படும் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

What do you think?

தீபிகா படுகோன்….க்கு குழந்தை பிறந்துள்ளது

பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்