நெல் மூட்டைகளுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு குவிந்த நெல் மூட்டைகள்-ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாடா ஏசி, டிராக்டர் வாகனங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகள் செஞ்சி ஒழங்கு முறை விற்பனை கூடம் எதிரே செஞ்சி திண்டிவனம் சாலையில் நெல் மூட்டைகளுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
விவசாயிகள் கொண்டு வந்த வாகனங்களை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் அனுமதிக்காத காரணத்தினால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கேட்டின் எதிரே வாகனங்கள் நின்றதால் புதுச்சேரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் புதுச்சேரி, கிருஷ்ணகிரிக்கு செல்லும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களும், சென்னையில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
சம்பா நெல் பயிரப்பட்டு அறுவடை செய்த நெல் மூட்டைகள் ஒரே சமயங்களில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வருவதால் போதிய இடவசதி இன்றி அதிகாரிகளும், விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.
இதனால் சாலையில் போக்குவரத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கி உள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்களின் விவசாயிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.