கும்பகோணத்தில் 560 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் மூவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவ. செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது 560 கிலோ புகையிலை பொருட்கள் ஒரு கார் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம் கொட்டையூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான, 70 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த 560 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்ததுடன், இக்கடத்தலில் தொடர்புடைய மன்மோகித் வைஷ்ணவ் (27), ரோனாசிங் (22) பிரகாஷ் (40) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய ஹூண்டாய் சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களையும் பறிமுதல் செய்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.