in

சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்ததில் மூவர் பலி


Watch – YouTube Click

சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்ததில் மூவர் பலி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு.

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பிரபலமான தனியார் மதுபான விடுதி அமைந்துள்ளது. இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் மதுபான விடுதியில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் இருவர் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 3 பேரை தவிர கிளப்பில் வேறு யாரும் இல்லை என காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்த விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு பணிகள் குழு சென்றுள்ள நிலையில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் – பேட்டி புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்

2000 ரூபாய் நோட்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதி மாற்ற முடியாது