புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையில் மூன்று பேர் ஓடையில் அடித்து செல்லப்பட்டனர்
புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையில் மூன்று பேர் ஓடையில் அடித்து செல்லப்பட்டனர். இதில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் புதுச்சேரியில் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் நேற்று மாலையில் கன மழை பெய்தது.இதனை தொடர்ந்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது நாளாக இன்று மாலையில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இன்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்த நிலையில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து ஆறு குளங்களாக காட்சியளித்தது. குறிப்பாக புஸ்சி வீதி,அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, சாரம், லாஸ்பேட்டை, வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், பூமியான் பேட்டை, ஜவகர் நகர், உள்ளிட்ட நகர பகுதி, அனைத்தும் மழை நீர் சூழ்ந்து ஆறு குளமாக காட்சியளித்தது இதனால் வாகன ஓட்டிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கினர்.
மேலும் மழை விட்டு இரண்டு மணி நேரம் ஆகியும் மழை நீர் விடிய விடிய வடிந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் புதுச்சேரி நகர பகுதி முழுவதும் ஆறு குளங்களாக காட்சி அளித்தது.
மேலும் வீடுகளில் புகுந்த மழை நீரால் வீட்டில் உள்ள அனைத்து பொருள் சேதமடைந்தது.வீட்டில் புகுந்த நீரை வெளியேற்றுவதற்காக குடியிருப்பு வாசிகள் விடிய விடிய காத்திருந்து மழை நீரை வெளியேற்றிய அவலமும் அரங்கேறியது.மேலும் தொடர்ந்து இரவில் கனமழை நீடித்தால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 புள்ளி 5 சென்டிமீட்டர் மழை அளவு புதுச்சேரியில் பதிவானது.
இதனிடையே லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பகுதியான ஜீவானந்தபுரத்தில் மழை வெள்ளம் தாழ்வான பகுதியான தட்டாஞ்சாவடி ஓடை வழியாக கொக்கு பாக்கு பாலத்தை கடந்து சென்றது. அப்போது சாலை வாசலில் வைத்துள்ள இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்று பகுதி சேர்ந்த ஐயப்பன் என்பவர் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டார்.
அவர் காப்பாற்ற சென்ற இரண்டு பேர் உட்பட 3 பேரும் ஓடைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அப்பகுதியை சேர்ந்தவர் விரைந்து செயல்பட்டு இருவரை மீட்டு நிலையில் ஐயப்பன் மட்டும் அடித்து செல்லப்பட்டார். நள்ளிரவையும் கடந்து தட்டாஞ்சாவடி மற்றும் கொக்கு பார் பகுதியில் அவரைத் தேடும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அங்கு வந்து தேடி பணியை பார்வையிட்டார். இருப்பினும் அவர் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து காலையில் உறவினர்கள் கொக்கு பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் தேடி வருகின்றனர்…