in

பெருந்தோட்டம் கிராமம் அருகில் 200 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொழிற்சாலை திட்டத்தை தடுக்க வேண்டும் மூன்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு 

பெருந்தோட்டம் கிராமம் அருகில் 200 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்காக தடுப்பு சுவர் கட்டப்படுவதால் விவசாயம் பாதிப்பு மேய்ச்சல் நிலங்கள் பறிபோவதால் கால்நடை வளர்க்க முடியாது திட்டத்தை தடுக்க வேண்டும் மூன்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பெருந்தோட்டம் அருகே அகரபெருந்தோட்டம், அல்லிமேடு, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் மெகா கிரேட் வோல்ட்டஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய சூரிய மின் ஒளி உற்பத்தி ஆலை துவங்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் இந்த நிலத்திற்குள் ஆடு மாடுகள் செல்லாதவாறு தடுப்பு சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் பறிபோவதால் கிராமங்களில் கால்நடை வளர்ப்பு தடைபடும் என்றும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் மழைக்காலங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரி முழு கொள்ளளவை எட்டினால் தண்ணீர் வெளியேற வழியின்றி தங்கள் கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் எனவே சூரிய மின் ஒளி தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மூன்று கிராம மக்கள் மனு அளித்தனர்.

What do you think?

மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்பனார்கோயிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு