ThugLife… படத்தில் இருந்து விலகும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்
மணிரத்தினத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்திருந்தார்.
அவரின் நடிப்புத் திறனை பார்த்த மணிரத்தினம் ThugLife படத்திலும் அவரை இணைத்து இருக்கிறார்.
பேன் இந்தியா மூவியாக உருவாகும் இப்படத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் இணைந்து இருக்கிறார்.
இவர்களுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, போன்ற நட்சத்திரங்கள் நடிக்க உள்ள நிலையில் ThugLife …இல் இருந்து துல்கர் சல்மான் விலகுவதாக அறிவித்திருந்தார்.
மணிரத்தினம் படம் வேலைகளை தாமதமாக ஆரம்பிப்பதால் துல்கர் சல்மான் மணிரத்தினிடம் முகத்திற்கு நேராக வே படத்தில் இருந்து விலகுவதாக கூறிவிட்டாராம்.
அவருக்கு பதிலாக சிம்புவை களம் இறக்க மணிரத்தினம் முடிவு செய்துள்ளார். தான் நினைத்தபடிஇல்லாமல் படத்தில் நிறைய குளறு படிகள் நடப்பதால் ஜெயம் ரவியும் மணிக்கு குட் bye சொல்லிட்டாராம்.
முக்கிய தலைகள் இரண்டு பேர் விலகினாலும் தன்னுடைய கதையில் எந்த மாற்றமும் செய்ய விரும்பாத மணிரத்தினம் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
முதன் முதலில் தன்னை அறிமுக படுத்திய குரு அழைத்தவுடன் சம்மதம் என்று ஒத்துக் கொண்டாராம்.