செஞ்சி மற்றும் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் இடியுடன் கூடிய சூறாவளி காற்று மழை பெய்து வருகிறது..
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..
தமிழ்நாட்டில் நீலகிரி கோவை உட்பட 14மாவட்டங்களில் இன்று மழை
பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம
பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து
வந்தன.
மேலும் செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 6.00மணி முதல் செஞ்சி, மேல்மலையனூர், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்ந்து வருகின்றன.
செஞ்சி,மேல்மலையனூர் அவலூர்பேட்டை வளத்தி, நாட்டார்மங்கலம் ,அப்பம்பட்டு,அனந்தபுரம், ஆலம்பூண்டி,சின்ன பொன்னம்பூண்டி, ஆகிய பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருகிறது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட விவசாயிகளின் 5-ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகளும்,வியாபாரிகள் கொள்முதல் செய்யப்பட்ட ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளும் திடீர் சூரவளி காற்று மழையினால் நினைந்தன.
விவசாயி தன் விவசாய விலை நிலங்களில் பயிரிடப்பட்ட தானியங்கள் விற்பனைக்கு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கொண்டு வரும்போது
இதுபோல் பெய்யும் திடீர் மழையினாலும் மற்றும் இயற்கையின் சீற்றத்தாலும் நனைந்த நெல் மூட்டைகளை விலை குறைவாக எடுப்பதால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகின்றனர்.
விவசாயிகளின் இன்னல்களை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அடிப்படை வசதிகள் ஆன இட வசதி,பாதுகாப்பு வசதி செய்து தராததும் அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்