in

திண்டிவனம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா

திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் திருக்கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவர் ஸ்ரீ முத்தாலம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மன் ஊஞ்சலில் பக்தர்களுக்கு ரம்மியமாக காட்சியளித்தார். தொடர்ந்து ஊஞ்சலில் காட்சி அளித்த ஸ்ரீ முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

இதில் நல்லியக்கோடன் நகர் மற்றும் J. P. நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

What do you think?

ஒலக்கூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது

திண்டிவனம் ஸ்ரீ ருத்ர பராசக்தி அருள்வாக்கு பீடத்தில் இரண்டாம் ஆண்டு சண்டி ஹோமம்