10-ம் வகுப்பு அரசு பொது தேர்வினை திண்டிவனம் கல்வி மாவட்ட இடைநிலை அலுவலர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்
செஞ்சியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை திண்டிவனம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) * * சிவசுப்பிரமணியன்* பார்வையிட்டார்…
தமிழகம் முழுவதும் இன்று தமிழக அரசின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றது.
அதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வினை திண்டிவனம் கல்வி மாவட்ட இடைநிலை அலுவலர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 12,366 மாணவர்கள், 11,760 மாணவிகள் என மொத்தம் 24, 126 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 126 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் மட்டும் பத்தாம் வகுப்பு அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 5051 மாணவர்கள், 4967 மாணவிகள் என மொத்தம் 10018 பேர் பத்தாம் வகுப்பு வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
மேலும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அந்தந்த தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வு எழுவதற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகள் செய்திருக்கின்றன.
ஒவ்வொரு மையங்களிலும் தேர்வு எழுதாத மாணவர்கள் பட்டியல் தயார் செய்து அடுத்த தேர்வுகளில் எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு குறித்து ஏற்கனவே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழ்த்துக்களையும் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேற்பார்வையாளர் V. வேல்முருகன் மாணவ மாணவியரிடையேதேர்வு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.
செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள இந்த தேர்வு பொதுத்தேர்வினை திண்டிவனம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலர் சிவ சுப்பிரமணியன் பார்வையிட்டார்.இவருடன் பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் விநாயகமூர்த்தி உடனிருந்தார்.
இந்த தேர்வு மையத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆறு மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்…