in ,

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் விழா திருக்கல்யாணம்

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் விழா திருக்கல்யாணம்

 

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மங்கல தாம்பூல சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன.

தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சிவபெருமான் மணமகன் அலங்காரத்திலும் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மணமகளாக காட்சியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து கலசை பூஜையும் காப்பு கட்டும் வைபவம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மேலும் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கும் வைபவம், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மண கோலத்தில் இருந்த தெய்வங்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி

ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா கஜ வாகன வீதி உலா