in ,

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய 58 ஆம் ஆண்டு ஆடி திருவிழா

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய 58 ஆம் ஆண்டு ஆடி திருவிழா என்னும் வசந்த உற்சவ விழாவில் மிகப் பிரம்மாண்டமான புஷ்பரத விமானத்தில் திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலயத்தில் 58 ஆம் ஆண்டு ஆடி பெருவிழாவை முன்னிட்டு வண்ண கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் மைய மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து மைய மண்டபத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஜெய முத்து மாரி அம்மனுக்கு மகாதீபாராதனை, நட்சத்திர தீபம் கும்ப தீபம் பல்வேறு சத்திரங்களை கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்ட புஷ்பரத விமானத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

மறுத்த உலக நாயகன்…. பிக் பாஸ் 8 சீசன்…. தொகுத்து வழங்க போவது நயனா? விஜய் சேதுபதி…யா

திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு வளைகாப்பு விழா