திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய ஆடி பெருவிழா என்னும் வசந்த உற்சவ விழா இரண்டாம் நாள் கோ பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் ஜெயபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்து அருள் பாலிக்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீ ஜெய முத்துமாரியம்மனுக்கு ஆடிப்பெருவிழா என்னும் வசந்த உச்ச விழா இரண்டாம் நாள் இன்று காலை கோ பூஜையுடன் தொடங்கியது. மேலும் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ லக்ஷ்மி பூஜை, ஸ்ரீ நவகிரக பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம் லக்ஷ்மி ஹோமம் நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு வகையான திரவிய பொருட்கள் வாசனை பொருட்கள், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மஹா பூர்ணாஹீதிசெலுத்தி பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசம் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து மூலவர் ஸ்ரீ ஜெய முத்துமாரி அம்மனுக்கு கலச நீரால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவாசி ஜெய முத்துமாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மூலவருக்குபஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடிப்பெருவ விழாவின் முக்கிய நிகழ்வான சாகை வார்த்தல் திருவிழா என்னும் கூழ் வார்த்தை திருவிழா நாளை காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.