திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய ஆடி பெருவிழா என்னும் வசந்த உற்சவ விழாவில் சாகை வார்த்தல் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் ஜெயபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்து அருள் பாலிக்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீ ஜெய முத்துமாரியம்மனுக்கு ஆடி பெருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ ஜெய முத்துமாரியம்மன் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டு ரம்யமாக காட்சியளித்த அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
மேலும் இன்று காலை குளக்கரை சென்று சக்தி கரகம் ஜோடித்து நாடகக் கலைஞர்கள் அம்மன் வேடம் அணிந்து மேளதாளம் முழங்க பம்பை இசை ஒலிக்க கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ ஜெய முத்துமாரியம்மன் மகிஷாசுரவர்த்தினியாக அலங்கரிக்கப்பட்டு செடல் குத்திக்கொண்டு கொண்ட பக்தரால் இழுத்துக் கொண்டு பகல் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து கூழ் வார்த்தல் என்னும் சாகை வார்த்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.