in ,

திண்டிவனம், செஞ்சிரோடு காலிமான் கொல்லை தெரு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனரோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா

திண்டிவனம், செஞ்சிரோடு காலிமான் கொல்லை தெரு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனரோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சிரோடு காலிமான் கொல்லை தெரு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனரோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை மங்கல இசையுடன் ஆரம்பமாயின. தொடர்ந்து,வேத பாராயணம், நாடி சந்தானம், தத்துவார்ச்னை, ஸ்பரிஸாஹுதி,இரண்டாம்கால யாக சாலை பூஜை பால் அபிஷேகம்,கோபூஜை, நேத்திரமீளனம் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து யாகசாலையில் மஹாபூரண்ஹுதி செலுத்தி பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது,மேலும் காலை 7. 45 மணி அளவில் யாத்ரதானம். கடம் புறப்பாடு நடைபெற்றது தொடர்ந்து விமான கோபுரங்களுக்கு பூஜிக்கப்பட்ட கலச நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் மூலவர்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகர்.ஸ்ரீ பாலமுருகன்.ஸ்ரீ துர்கை அம்மன்,நவகிரங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு பஞ்சமுக தி பாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

திண்டிவனம் செஞ்சி சாலையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கடலூர் மாவட்டம், குளிஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தில் ஸ்ரீ ஆதிதவபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம்