திண்டிவனம் ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய துவஜாரோஹணம்
ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏழாம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு துவஜாரோஹணம் என்னும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏழாம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலக ஸ்ரீ முத்தாலம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழாவில் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கொடிக்கு பூஜை செய்யப்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் மாலை கணபதி பூஜை நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 26 ஆம் தேதி காலை 12 மணியளவில் நடக்கிறது.