in ,

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய 64 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம்

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய 64 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம்

 

திண்டிவனம் ராஜாங்குளம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய 64 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர ராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சிவபெருமான் மற்றும் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மணமக்களாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

.மேலும் விநாயகர் பூஜைவுடன் இனிதே தொடங்கியது. மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் கால்நடும் வைபத்துடன் மற்றும் கலச பூஜை, காப்பு கட்டும் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா கஜ வாகன வீதி உலா

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதூர் மாத விரதம் துவக்கம்