in ,

திண்டிவனம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம்

திண்டிவனம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிகப்பு பட்டு உடுத்தி வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வெண்ணியம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு சிறிய தேரில் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த வெண்ணியம்மனுக்கு கும்ப தீபம், அடுக்கு தீபம்,பஞ்சமுக தீபாதாரணை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் ஆகியவை காண்பிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

பெண் பணியாளர்களுக்காக பின்ங் சோன் (PINK ZONE) மையம் திறக்கப்பட்டுள்ளதாக நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

திண்டிவனம் செஞ்சி சாலையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா