திண்டிவனம் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் ஸம்ப்ரோக்ஷண பாலாலய விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் ஸ்ரீ கனல்வல்லி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி திருக்கோயில் ஸம்ப்ரோக்ஷண பாலாலய விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான வாசனைப் பொருட்கள் திரவிய பொருட்கள் செலுத்தப்பட்டது. மேலும் இந்த கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் பாலாலய பூஜை நடைபெற்றது. அதில் கோயில் பல இடங்களில் தீர்த்த குடங்கள் வைத்து பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் பலகைகளில் மூலவர்ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் சுவாமி மற்றும் ஸ்ரீ கனகவல்லி தாயார்,பரிவார தெய்வங்களின் படங்கள் வரையப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட குடங்களில் தெய்வ சக்தி நிலை நிறுத்தப்பட்டு அறையில் வைகாப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் திரைகளால் மூடப்பட்டது. மூலஸ்தானங்களில் இருந்து உறசவமூர்த்திகள் பூஜிக்கப்பட்ட அறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டனர் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர்.