ஐப்பசி துலா உற்சவ திருநாளை முன்னிட்டு தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் தீர்த்தவாரி வைபவம்
ஐப்பசி துலா உற்சவ திருநாளை முன்னிட்டு தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் ஐப்பசி துலா உற்சவம் திருநாளை முன்னிட்டு மணிமுத்தாறு ஆற்றில் தீர்த்த வாரி வைபவம் நடைபெற்றது.
முன்னதாக நகரில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலிருந்து ஸ்ரீ சிலம்பரணி விநாயகர் ஸ்ரீ கோதண்ட ராமர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் மற்றும் ஸ்ரீ கைலாசநாதர் ஆகிய உற்சவ தெய்வங்கள் கருட வாகனம் ரிஷப வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மணிமுத்தாறு ஆற்றில் தெய்வங்களின் அஸ்திர தேவர்கள் சக்கரத்தாழ்வார்களை எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது இதனை அடுத்து மங்கள வாத்தியங்கள் வேத மந்திரங்கள் முழங்க திருத்தவாரி வைபவம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி வைபவத்தை கண்டு வழிபாடு செய்தனர்.