செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் விழா
செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் விழா … வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணருக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு 10 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அன்று காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கட்ரமணருக்கு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு திருமஞ்சன ஆராதனைகள் நடைபெற்று,
பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண வைபோகத்தை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சியுடன் பெண்கள் சீர்வரிசையுடன் சுவாமி கோயில் பிரகாதத்தை வலம் வந்தார்.
பின்னர் வெங்கட்ரமணர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள மணவறையில் ஸ்ரீதேவி, பூதேவி வெங்கட்ரமணர் எழுந்தருளினார். தொடர்ந்து வேத, மந்திரங்கள் முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் செஞ்சி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திருக்கல்யாண விழாவை முன்னிட்டு பஜனை, கோலாட்டம் மற்றும் செஞ்சி ஜனனி நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டியம், நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவி வெங்கட்ரமணரை ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதிகல்லூரி நிறுவனத்தின் தாளாளர் வழக்கறிஞர் ஆர்.ரங்கபூபதி, கல்லூரி இயக்குனர் சாந்திபூபதி,சரண்யா ஸ்ரீபதி, வழக்குரைஞர் வைகை தமிழ்ச்செல்வம், ஜெயந்தி தமிழ்ச்செல்வம், மற்றும் சுதர்சன பாகவதர், மணி, முனியப்பன், சீனுவாசன் சிவகுமார், விஜயகுமார், திருமலை, சக்திவேல், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
திருக்கல்யாண வைபோக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.