செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில்,உற்சவ திருமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவ விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மாநகரின் ஈசான மூலையில் அமைந்துள்ள சித்தர்கள் வழிபாடு செய்த சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழம் பெரும் திருத்தலமாக விளங்கும் செஞ்சி சிறுகடம்பூர் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள உற்சவ திருமூர்த்திக்கு திருக்கல்யாண வைபோக வழிபாடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் பலவகை பழங்கள் கொண்டு திருமண வரிசை தட்டுகளுடன் மேளதாளங்கள் முழங்க திருக்கோவிலை வலம் வந்தனர்.
பின்னர் பக்தர்கள் சுவாமியை தோளில் சுமந்து சிவாச்சியார்கள் திருமண சடங்குகளுடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியுடன் பக்தர்கள் சுவாமியை விழா மேடையில் அமர வைத்தனர்.
கலசங்கள் வைத்து யாகங்கள் அமைக்கப்பட்டு,யாக பூஜை நடைபெற்றது.
பக்தர்களின் இரு விட்டார் சடங்குகளுடன் சிவன் பார்வதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிவாச்சாரிகள் திருமண மந்திரங்கள் ஓத சுவாமிகளுக்கும், கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக மூலவர் காசி விஸ்வநாதர்க்கும்,உற்சவர் சிவன்,பார்வதிக்கு,பால் தயிர் சந்தனம் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பலவகை மலர்கள் தங்க ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
பின்னர் யாக,ஓம மந்திரங்களுடன், சுவாமிக்கு பூணல் சாத்தப்பட்டு, பக்தர்கள் சிவபுராணம் சிவ பாடல்கள் பாட மாங்கல்ய பூஜைகளுடன் பக்தர்களின் கரகோஷத்துடன் திருமண வைபோகம் நடைபெற்றது.
அப்பொழுது பக்தர்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என கோஷங்கள் எழுப்பி வணங்கினர்.
பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சுவாமியின் பாதங்களுக்கு மலர்களால் அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருமண விழா கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிவபெருமான் பார்வதி அம்பாளுக்கு ஆரத்தி பாடல்கள் பாடியவாறு பெண் பக்தர்கள் ஆரத்தி எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள்,சிவதொண்டர்கள்,ஊர் பொதுமக்கள்,இளைஞர்கள் செய்திருந்தனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.