அருள்மிகு மஞ்சினி கூத்தய்யனார் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகம்
புதுச்சேரியில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு மஞ்சினி கூத்தய்யனார் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அடுத்த பெருங்களூர் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னு மாரியம்மன் மற்றும் மஞ்சினி கூத்தைய்யனார் கோவில் அமைந்துள்ளது.
அந்தக் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத மகோத்சவ திருவிழாவின் ஒரு பகுதியாக பூரணி பொற்கலை சமேத மஞ்சினி கூத்தைய்யனார்
சாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சாமிகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மஞ்சினி கூத்தைய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவத்தில் திருமணமாகாதவர்கள்குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் திருமணம் ஆகும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் இதில் சுற்று கிராமப்புறங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து திருமண கோலத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.