in

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 63 நாயன்மார்களின் சிறிய ரகத் தேர்தல் பழுது பார்த்து வர்ணம் தீட்டும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மாணவர்கள் மட்டும் தோளில் சுமந்து வரும் 63 நாயன்மார்களின் சிறிய ரகத் தேர்தல் பழுது பார்த்து வர்ணம் தீட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது…

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி அண்ணாமலையார் சந்நதி அருகே உள்ள தங்க குடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது..

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு பரணி தீபமும் தொடர்ந்து கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த மகா தீப தரிசனத்திற்கான தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீபத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,

குறிப்பாக 10 நாட்கள் சாமி வீதி உலா நடைபெற உள்ள வாகனங்கள் வர்ணம் பூசுதல் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 9-ம் தேதி தீபத் திருவிழாவின் 6-ம் நாள் காலை உற்சவத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் தோள்களில் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட 63 நாயன்மார்களளை தங்கள் தோள்களில் சுமந்தவாறு மாடவீதியில் வலம் வருவர்.

இந்த நிலையில் 63 நாயன்மார்களின் சிறிய ரக தேர்களை கோவில் ஊழியர்கள் பழுது பார்த்து வர்ணங்கள் பூசும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது..

What do you think?

பாபநாசம் தாலுகா பகுதிகளில் தொடர் மழையால் வெற்றிலை கொடிக்கால் சாய்ந்து சேதம்..

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 22.11.2024