in

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம், கருட சேவை

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம், கருட சேவை

 

நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம், கருட சேவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹா’ரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெஙகட்ரமண பெருமாள் ஆலயத்தில் “கார்த்திகைமாத திருவோணநட்சத்திர தினத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம் மற்றும் கருடசேவை மிக விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு திருக்கோடி தீபம் ஏற்றி காட்டப்பட்டு கோவில் உள்ள தெய்வங்களுக்கு திருக்கோடி தீபம் காண்பித்த பிறகு கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திரு கோடி கம்பத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் உற்சவ எம்பெருமான் கருட சேவையில் காட்சி அளித்தார் பின்னர் சிறிய பல்லாத்தில் கருடசேவையில் அலங்கரிக்கப்பட்ட பெருமாளை பட்டாச்சாரியார்கள் தோள்களில் சுமந்தவாறு திருக்கோவில் சுற்றி வந்தனர் அப்போது சக்கரத்தாழ்வார், பத்வாவதி தாயார், தன் வந்திரி, லட்சுமி ஹயக்ரீவர், சம்போன கோபாலான், காவேரி தாயார், உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஹாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள்ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை வணங்கிச் சென்றனர்.

What do you think?

சிதம்பரம் அருகே குளத்தில் பொதுமக்கள் பார்வையில் கண் பட்ட 8 அடி நீல முதலையால் கிராம மக்கள் அச்சம்

திருவெண்காட்டில் இலவச பயிற்சி அளிக்கும் இயற்கை விவசாயி காசி ராமனுக்கு பாராட்டுக்கள்