in

திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

திருநெல்வேலி மாநகாில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரம் என்னும் திருத்தலத்தில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.

இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோயில் என்பதை பறைசாற்றுகிறது. சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது.

சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் ஆவணி மாதம் வரும் விநாயகா் சதுா்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக நேற்று மாலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி அங்குராா்ப்பணம் ரக்ஷாபந்தனம் போன்றவைகள் நடைபெற்றன. திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு காலை சந்திகள் நடைபெற்று யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமாயிற்று. தொடா்ந்து உற்சவா் விநாயகப்பெருமானை கொடிமரம் முன்பாக சிறப்பு அலங்காரத்துடன் ஏழுந்தருளச் செய்ததனா். பின்னா் கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 09.00 – 10.00 க்குள் கன்யாலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னா் கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 10 தினங்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள் சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறுகின்றது. மாலையில் விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது. சிறப்பாக வருகின்ற 05ம் தேதி 8ம் திருநாளில் மூலவருக்கு 1008 தேங்காய் அலங்காரமும் மாலையில் பச்சைசாத்தி திருவீதி உலாவும் நடைபெறும். வருகின்ற 07ம் தேதி ஸ்ரீ விநாயகா் சதுா்த்தி விழாவும் நண்பகலில் தாமிரபரணி நதிக்கரையில் தீா்த்தவாாி நடைபெற்று திருவிழா நிறைவடைகின்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

What do you think?

3 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்த இளைஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு 1000 ரூபாய்