in

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா

 

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் வீதி உலா- தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் தெய்வானையுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

இன்று ஆறாவது நாளாக சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்திலும், சத்தீயகீரீஸ்வரர் பிரியாவிடை அம்மன் ரிஷப வாகனத்திலும், கோவர்த்தன அம்பிகை ரிஷப வாகனத்திலும் திருப்பரங்குன்றம் கீழரத விதி, மேல ரதவீதி, பெரிய ரத வீதி என திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் முன்னதாக திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபம் முன்பு சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

What do you think?

மயிலாடுதுறையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாளையொட்டி பாரதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை