in ,

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாடு

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாடு

 

பாதுகாப்பு பணிகளில் 5 ஆயிரம் போலீசார். பாதுகாப்பு பத்ம வியூகத்தில் திருப்பதி மலை.

மூன்றரை லட்சம் பக்தர்களை கையாள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன புறப்பாடு இன்று மாலை 6:30 மணி அளவில் துவங்கி இரவு 12 மணி வரை கோவில் மாட வீதிகளில் நடைபெற உள்ளது.

கருட வாகன புறப்பாட்டை கண்டு தரிசிக்க மூன்றரை லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று மதிப்பிட்டு அதற்கு தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்து இரவு நடைபெற இருக்கும் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபட கேலரிகளில் காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் டீ காபி போன்ற வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் ஊழியர்கள் சேவையாளர்கள் ஆகிய ஒரு மூலம் கொண்டு சேர்த்து வருகிறது.

அதியே அளவிலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு தேவையான வகையில் ஐந்தாயிரம் போலீசார், 2500 தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ஆகியோர் உட்பட சுமார் 8000 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கு தேவையான அளவில் போலீஸ் உயரதிகாரிகளும் திருப்பதி மலையில் முகாமிட்டுள்ளனர்.

திருப்பதி திருமலை இடையே 400க்கும் மேற்பட்ட பேருந்துகளை 3 ஆயிரம் டிரிப்கள் இயக்கி பக்தர்களை கையாளவும், 8000 வரை சொந்த வாகனங்களை மட்டும் திருப்பதி மலைக்கு அனுப்பி வைக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் 24 மணி நேரமும் திருப்பதி மலைப்பாதை போக்குவரத்திற்கு திறந்திருக்கும் நிலையில் நாளை காலை 9 மணி வரை இரு சக்கர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

What do you think?

வேட்டையன்…. பட ரிலீஸ்…இக்கு …ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த புதுச்சேரி நிறுவனம்

சிதம்பரத்தில் விசிகள் காங்கிரஸ், தி.க உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்