in

திருப்பதி மைதானத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய காக்டைல் மது

திருப்பதி மைதானத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய காக்டைல் மது

 

அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ 36 லட்சம் மதிப்புள்ள 27 ஆயிரத்து 568 மது பாட்டில்கள் அழிப்பு.

ஆந்திராவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மது விலை ஆந்திராவை விட குறைவாக உள்ளது.

எனவே அந்த மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து ஆந்திராவில் விற்பனை செய்யும் சட்டவிரோத தொழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பொது தேர்தல் சமயத்தில் பெரும் அளவில் ஆந்திராவுக்கு மது கடத்தல் நடைபெற்றது.

அப்போது கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து திருப்பதி மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 ஆயிரத்து 568 மது பாட்டில்களை திருப்பதி எஸ் பி சுப்பராய்டு முன்னிலையில் போலீசார் ரோடு ரோலரை ஏற்றி இன்று அழித்தனர்.

இதனால் அந்த மைதானத்தில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசிய எஸ்பி சுப்பராயிடு, மது கடத்தல் சட்டவிரோதம் என்று தெரிந்தும் அதை சிலர் தொடர்ந்து கடத்தி வந்து கொண்டிருந்தனர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

What do you think?

துறையூர் பாலக்கரை அருகே வீடியோ எடுத்த மர்ம நபருக்கு தர்ம அடி 

திருப்பதி மலையில் கருட பஞ்சமி வருட வாகன புறப்பாடு