திருப்பதி பௌர்ணமி கருட சேவை
பௌர்ணமி தினமான திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு மாலை ஏழு மணிக்கு துவங்கி கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று கருட வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபட்டனர்.