in

திருப்பத்தூர் அருள்மிகு பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழா  பால்குடம் வழிபாடு

திருப்பத்தூர் அருள்மிகு பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழா  பால்குடம் வழிபாடு

 

திருப்பத்தூர் அருள்மிகு பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அருள்மிகு பூமாயி அம்மன் கோயிலில் கடந்த 17ம் தேதி பூச்சொரிதழ் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 15 வது ஆண்டாக வசந்த பெருவிழா கடந்த 18ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி 10 நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த வசந்த பெருவிழாவில், 5ம் நாள் விழாவான இன்று பால்குட திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், சாம்பான் ஊரணி அருகே உள்ள ஸ்ரீ கோட்டை கருப்பர் கோயிலில் இருந்து பால்குடம், பூத்தட்டுகளை தலையில் சுமந்து நான்குரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோயில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோயில் வந்தடைந்தனர்.

அதன்பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் பூமாயி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிந்தனர்.

பின்பு அந்த பூக்களை பெண்கள் மடி ஏந்தி வாங்கி சென்றனர். பால் குடம் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பால்குடம், பூ உள்ளிட்ட பொருட்கள் வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.

What do you think?

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பிரமோட்சவ விழா யானை வாகனம்