in

திருப்பத்தூர் ஶ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் வசந்த பெருவிழா

திருப்பத்தூர் ஶ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் வசந்த பெருவிழா

 

திருப்பத்தூர் ஶ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவிலில் வசந்த பெருவிழா முன்னிட்டு உற்சவர் அம்மன் அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவிலில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு பூமாரிஅம்மன் அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இக்கோவிலில் பூமாரி அம்மன் சப்த கன்னிமாரியம்மன் அருள்பாலித்து வருகின்றனர் கோவிலில் வசந்த பெருவிழா கடந்த பதினெட்டாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் ஒரு நிகழ்வாக உற்சவர் அம்மன் அன்ன வாகனத்தில் பவனி வந்தார் முன்னதாக ஆதி பூமாரி அம்மன் மற்றும் உற்சவர் பூமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து சொடச உபசாரங்கள் நடைபெற்றன பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழுமுக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து மங்கள வாத்தியங்களுடன் அம்மனை வாகனத்தில் எழுந்தருள செய்து நகர்வலம் வர செய்தனர். மின்னொழியில் மங்கள வாத்தியங்களுடன் பவனி வந்த பூமாரி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பைரவஷ்டமி யாகம்

குன்றக்குடி அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா