குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை திருகோவில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை திருகோவில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் குழல்வாய் மொழியம்மை திருக்கோவில்
பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை இங்கு உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மார்கழி திருவாதிரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மரத்திற்கு சந்தணம், திரவியம், பால், தயிர், மஞ்சள், மா பொடி என அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடை பெற்றது.
தினமும் சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக திரு தேரோட்டம் வருகின்ற 8-ம் தேதியும், 11-ம் சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 13-ம் தேதி சித்திரை சபையில் அதிகாலை ஆருத்ரா தாண்டவ தீபாராதனையும் அதனை தொடர்ந்து கோவிலில் அமைந்துள்ள திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், மனோகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.