in ,

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம்

 

ஐப்பசி மாதம் பிறப்பு, பௌர்ணமியை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம்.

ரோஸ் கரை வெண்பட்டு, உடுத்தி பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து
ஸ்ரீதேவி,பூதேவி உடன் வீதி உலா வந்த வரதராஜ பெருமாள்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஐப்பசி மாதம் பிறப்பு மற்றும் பௌர்ணமியை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, ரோஸ் கரை வெண் பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, கனகாம்பரம் பூ, பஞ்சவர்ண பூ, மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை வழியெங்கும் திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து கற்பூர ஆர்த்தி கொடுத்து வணங்கி வழிபட்டனர்.

பின்னர் கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாளுக்கு தங்க குடை சூழல கும்ப ஆரத்தி எடுத்து அத்திகிரி மலையில் உள்ள மூலவர் கருவறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

திருவடி கோவில் புறப்பாடு உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பெருமாள்பட்டி அருள்மிகு ஶ்ரீ பஞ்சாட்சர அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரவி எடுப்பு விழா

காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா, திரு சந்தனக்கூடு உற்சவ திருவிழா