in

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திரு கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திரு கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் நடைபெறும்.

13-ம் தேதி அதிகாலை பரணி தீபம் அன்று மாலை 2668 உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

காவல்துறை சார்பில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரக் காரக் வேலூர் சரக டிஐஜி தேவராணி, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஒன்றாம் பிரகாரத்தில் பரணி தீபத்தின் போது எத்தனை பேர் உள்ளே நிற்பதற்கு அனுமதிப்பது குறித்தும் அதேபோல் மகா தீபத்தை காண்பதற்கு கோவிலின் மூன்றாம் பிரகாரமான கொடி மரத்தின் அருகில் பக்தர்கள் எத்தனை பேர் அனுமதிப்பது குறிக்கும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ராஜகோபுரத்தின் வழியாகவும் அம்மணி அம்மன் கோபுரத்தின் வழியாகவும் பக்தர்கள் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு உள்ளே வரும் பாதைகளையும் பார்வையிட்டு ஆய்வுக்கு கொண்டார்.

தொடர்ந்து ராஜகோபரத்தின் வெளியில் பதினாறும் கால் மண்டபத்தின் அருகில் தேரடி வீதியில் சாலையிலேயே ஆன்மீக பக்தர்கள் ஏற்றும் நெய் தீப விளக்கினால் பக்தர்களுக்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தகரத்தினாலான ஸ்டாண்டட் பயன்படுத்தி ஏற்றுவதற்கும் கீழே ஏற்றாமல் இருப்பதற்கு காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து வரவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

சாலையின் ஓரத்திலேயே தேங்காய் பழம் நெய் விளக்கு விற்கும் வியாபாரிகளை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைப்பதற்கும் அறிவுறுத்தினார்.

சாலையில் பக்தர்கள் ஏற்றும் நெய் தீப விளக்கு மலை போல் குவிந்து இருப்பதையும் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றுவதினால் சாலை அதிக சூட்டோட காணப்படுகிறது சம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து திருவண்ணாமலைக்குள் வரக்கூடிய 9 நுழைவாயில்களில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

What do you think?

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிய கணவன் கைது…

செங்கம் அருகே புதிதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மூன்று மாதத்திலே இடிந்து விழுந்த மேற்கூறை பூச்சு