in

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளி பௌர்ணமி பிரதோஷம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளி பௌர்ணமி பிரதோஷம் கொக்கரை ஒலி முழங்க விமர்சையாக நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம் விமர்சையாக நடைபெற்றது.

கோபுரத்து இளையனார் சன்னதி முன்பு உள்ள நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் பச்சரிசி மாவு அபிஷேகப்படி மஞ்சள்
பால் தயிர் தேன் கரும்புச்சாறு பஞ்சாமிர்தம் விபூதி இளநீர் எலுமிச்சைச்சாறு பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு பிரம்மாண்டமாக அபிஷேகம் நடைபெற்றது.

மல்லிப்பூ முல்லைப்பூ வில்வம் மனோரஞ்சிதம் சம்பங்கிப்பூ தாமரைப் பூ அரளிப்பூ செம்பருத்திப்பூ சாமந்திப்பூ கோழிகொண்டைப்பூ மகா வில்வம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கைலாய வாத்தியமான கொக்கரை ஒலியுடன் வேத மந்திரங்கள் முழங்க நந்தியும் பெருமானுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது .
இந்த ஆடி பௌர்ணமி பிரதோஷ பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

What do you think?

திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனை சாவடியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனை