திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய 15 லட்சம் மேல் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய 15 லட்சம் பக்தர்களுக்கு மேல் குவிந்ததால் திருவண்ணாமலை நகரமே ஸ்தம்பித்துள்ளது
திருவண்ணாமலையில் இன்று ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்கின்றனர் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பாதுகாப்புகள் குறித்து.
மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழகமெங்கிலும் இருந்தும் 1500 பேருந்துகளின் மூலம் 5000 நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
11 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அந்தந்த சாலைகளில் இருந்து வரும் பேருந்துகள் அங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுகிறது.
அண்ணாமலையார் ஆலயத்தில் இலவச மோர் லட்டு வாட்டர் பாட்டில் கடலை மிட்டாய் போன்றவைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அம்மணி அம்மன் கோவில் தெருவில் இருந்து காந்தி சிலை வரை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது இதுவரை அம்மணி அம்மன் கோபுரத் தெருவில் மட்டுமே பந்தல் அமைத்திருந்த நிலையில் பக்தர்கள் அதிகமாக எண்ணிக்கையில் வர இருப்பதால் காந்தி சிலை வரை பந்தல் அமைக்கப்பட்டது.
ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு ஆம்புலன்ஸ் கிரிவலப் பாதையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னதானம் போடுபவர்கள் அன்னதானம் சாப்பிட்ட பிறகு குப்பைகளை தனியாக குப்பைத்தொட்டிகளில் சேகரிக்க வேண்டும் குறிப்பாக பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது பாக்கு மட்டைகள் மந்தாரை இலை அழியக்கூடிய வகைகளை மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும் இன்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கிரிவலம் செய்யும் பக்தர்கள் இன்று இரவு நாளை காலை சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொழுது அவர்களுக்கு போதுமான பேருந்துகள் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாகவும் உள்ளது.
அண்ணாமலையார் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் காந்தி சிலையிலிருந்து வரிசையில் நின்று ஏழு மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.