புதுச்சேரியில் டெங்கு மலேரியா நோய் பரவாமல் இருக்க 42 கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தீவிரம்.
மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்களிலிருந்து மக்களை காக்கும் வகையில் மேலும் நோய்கள் பரவாமல் இருக்கும் வகையிலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 42 கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை துவக்கப்பட்டது.
திருக்கனூரில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மழைநீர் தேங்கும் பகுதி, புதர் மண்டி கிடக்கும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் இயந்திரங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொங்கப்பட்டது. இதன் படி மன்னாடிபட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 42 கிராமங்களிலும் இந்த பணி தொடங்கப்பட்டது இதற்காக ஊழியர்கள் போதுமான அளவுக்கு பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தூய்மைப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது.
இது குறித்து மண்ணடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் கூறும் போது…
தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய நீர் நிலைகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்ககை எடுக்கப்படுகிறது டெங்கு மற்றும் மலேரியா ஏற்படாத வண்ணம் அனைத்து பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.