in

நமச்சிவாயம் வெற்றி பெற 108 பூசணிக்காயை கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்த பொதுமக்கள்


Watch – YouTube Click

நமச்சிவாயம் வெற்றி பெற 108 பூசணிக்காயை கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்த பொதுமக்கள்

 

புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளராக நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டி 108 பூசணிக்காயை கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்த பொதுமக்கள்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முதலமைச்சர் ரங்கசாமி காலை மற்றும் மாலை வேலைகளில் தீவிர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் புதுச்சேரி பகுதியிலுள்ள பல்வேறு தொகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தங்களுடைய அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் தெரிவித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்…

இதேபோல் கூட்டணி கட்சி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் தாமரை சின்னத்திற்கு வாக்குகளைக் கேட்டு தங்களுடைய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்…

இந்த நிலையில் இன்று மாலை மண்ணாடி பட்டு தொகுதியில் முதலமைச்சரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். திருக்கனூர் பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரமானது பல்வேறு பகுதிகளில் சென்று தாமரைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்…

அப்பொழுது சந்தை புது குப்பம் பேட்டை பகுதியில் சென்ற பொழுது அங்கிருந்த பொதுமக்கள் 108 பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தாமரைச் சின்னத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி திருஷ்டி சுற்றி பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்… அதனைத் தொடர்ந்து திருக்குனூர் பகுதியில் தாமரை பூக்களுடன் அப்பா பைத்தியசாமி இருக்கும் புகைப்படத்தை நமச்சிவாயத்திற்கு அளித்து வாழ்த்துக்களையும் தொண்டர்கள் தெரிவித்தனர்…


Watch – YouTube Click

What do you think?

பாஜக 400 இடங்களை பெறும் காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் ஆவேச பேச்சு