in

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல்


Watch – YouTube Click

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல்

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 90,582 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமார் 17,500 ‘மிகவும் பதட்டமடைந்த’ வாக்குச் சாவடிகள், 32,508 சென்சிட்டிவ் வாக்குச் சாவடிகள் மற்றும் 42,500 பொது வாக்குச் சாவடிகள் உள்ளன.

மக்கள் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலானது இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

பாகிஸ்தானில் 36 லட்சம் சிறுபான்மை வாக்காளர்கள் உள்ளனர். அதில் 18 லட்சம் பேர் இந்து வாக்காளர்கள். அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள். பாகிஸ்தானில் வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இங்கு பொதுத் தேர்தலுக்காக 26 கோடி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அதன் மொத்த எடை சுமார் 2100 டன்கள் ஆகும்.

நவாஸ் ஷெரீப்பும், அவரது பிஎம்எல்-என் கட்சியும் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பதிவு செய்யப்பட்ட 167 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சையாக மொத்தம் 5, 121 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளை பார்த்தால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீ, பிலாவல் பூட்டோ மற்றும் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தேர்தல் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவரது கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இம்ரான் கான் 2022 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மின்வாரியத்தில் தற்காலிமாக பணியாளர் கண்மாய் நீரில் மூழ்கி பலி

15 தொகுதி தந்தால் மட்டுமே கூட்டணி பிரேமலதா விஜயகாந்த்