in

ஆசாட நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான இன்று வராகி அம்மனுக்கு காய்கறி அலங்காரம்

ஆசாட நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான இன்று வராகி அம்மனுக்கு காய்கறி அலங்காரம். திரளான பக்தர்கள் நீண்ட வரிசைகள் நின்று சுவாமி தரிசனம்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாட்கள் ஆசாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆசாட நவராத்திரி விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பத்தாவது நாளான இன்று காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

What do you think?

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பணாமணீஸ்வரர் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை விழா

சிவகங்கை அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு