in

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்


Watch – YouTube Click

புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024) | இன்றைய முக்கிய செய்திகள்

 

மக்களவை சபாநாயகருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து.

மக்களவையின் மாண்புமிகு சபாநாயகராக நீங்கள் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்கள் உன்னதமான பாராளுமன்ற அனுபவத்தின் மூலம் தேசம் ஏற்கனவே சபையின் கண்ணியத்தை கண்டுள்ளது. உங்களது திறமையான மற்றும் திறமையான நிர்வாகத்தின் கீழ், மக்களவை நம்பமுடியாத முடிவுகளைப் பெற்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இரண்டாவது முறையாக நீங்கள் விரும்பத்தக்க பதவியைப் பெற்றதற்கு புதுச்சேரி மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்துவிட்டால், வாழ்க்கை, ஆரோக்கியம் கெட்டுவிடும். போதைப் பொருட்களால் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

போதைப் பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதி மொழி ஏற்பது அவசியம் சர்வதேசப் போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு.

புதுச்சேரியில் காவல்துறை சார்பில் சர்வதேசப் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு தின பேரணி நடைபெற்றது. உருளையன்பேட்டை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை காந்தி சிலை திடலில் நிறைவடைந்தது.பின்னர் அங்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்: நாட்டின் எதிர்கால வளர்ச்சி இளைஞர்கள், மாணவர்கள் கையிலே இருக்கிறது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாகவும், அனைத்தையும் சிந்தித்து முடிவு செய்பவர்களாக இருக்க வேண்டும்.அதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானது. தற்போது இளைஞர்கள், மாணவர்களிடம் சில தீய பழக்க வழக்கங்கள் இருப்பதை நாம் பாரக்கின்றோம். அது நம்முடைய வாழ்க்கையை சீரழித்துவிடும். குறிப்பாக போதை பொருட்கள் நம்மை அடிமையாக்கிவிடம்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரது உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது நல்ல சிந்தனையும் அழிகிறது. போதை பொருட்களின் பழக்கத்துக்கு அடிமையாகாத உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.சிலருடைய லாபத்துக்காக இளைஞர்களையும், மாணவர்களையும் சீரழித்துவிடுகின்றனர்.பணம் சம்பாதிக்கலாம் என கூறி சிறுவர்களை போதைப் பொருள் விற்க தூண்டுகின்றனர்.அது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இளைஞர்களை, மாணவர்களை சீரழிப்போரை கடுமையான நடவடிக்கைகள் மூலமாக தண்டிக்க வேண்டும்.

இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்துவிட்டால், வாழ்க்கை, ஆரோக்கியம் கெட்டுவிடும். போதைப் பொருட்களால் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். நோயற்ற நிலையில் இருந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்கும்.போதைக்கு அடிமையானவர்களுக்கு தங்களது செயல்பாடே தெரிவதில்லை. ஆகவே, நாம் போதைப் பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதி மொழி ஏற்பது அவசியம் என தெரிவித்தார்.

மேடை பேச்சு…ரங்கசாமி…முதலமைச்சர்.

நிகழ்ச்சியில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர். விழிப்புணர்வு கையழுத்து இயக்கம், கலை நடனமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், டிஜிபி ஸ்ரீநிவாஸ், சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மத்திய அரசு செயல் படுத்த உள்ள 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்

இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1983 ஆகிய சட்ட ங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றிற்கு மாற்றாக மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாது காப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா – 2023 (இந்திய நியாயச் சட்டம்), பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டங்களை ஜூலை 1ந் தேதியில் இருந்து அமலாக்க உள்ள தாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைக்கக் கோரி கடந்த சில மாதங்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மற்றும், இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள் இந்த ஆர்ப்பட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

 

புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியில் ரூ. 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சின்தடிக் ஸ்கேட்டிக் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியில் அமைத்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் ரூபாய் 25 லட்சத்தில் சிந்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக காலாப்பட்டு மற்றும் லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்று மைதானத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பிரசாத் ராவ், செயலாளர் தாமஸ் பொருளாளர் ஸ்டீபன் ராஜ், இணைச்செயலாளர் செந்தில் குமார், துணைத் தலைவர் ராஜேஷ் செயின், மூத்த துணைத்தலைவர் பழனி, டெக்னிகள் கமிட்டி அமரேந்திர குமார்,செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

புதுச்சேரி மேலும் ஒருவர் பலி; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கள்ள சாராயம் குடித்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் பலி;

ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது மகேஷ்(41) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்;

ஜிப்மரில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

வன்னியர் இட ஒதுக்கட்டை தர மறுத்தால் மாநிலம் தழுவிய போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024)