25
பிப்ரவரி

2025

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 25ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும்.

நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்

அஸ்வினி : விருப்பங்கள் நிறைவேறும்.
பரணி : ஆதரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே!

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். வேலை சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும்.

கூட்டாளிகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கப்பெறும். பழைய விஷயங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சோர்வு ஏற்படும்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.

புதிய அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். சஞ்சலம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
திருவாதிரை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்

கடகம்

கடக ராசி அன்பர்களே!

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவமும் பொறுமையும் வெளிப்படும். உழைப்பு மேம்படும் நாள்

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அனுபவம் வெளிப்படும்.

சிம்மம்

சிம்மம் ராசி அன்பர்களே!

மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.

அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான மதிப்பினை உருவாக்கும். வளம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : தயக்கங்கள் நீங்கும்
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : மதிப்பினை மேம்படுத்தும்

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியால் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும்.

வியாபாரப் போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அஸ்தம் : பக்குவம் பிறக்கும்.
சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம்

துலாம்

துலாம் ராசி அன்பர்களே!

உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில் நுட்ப கருவிகள் பற்றிய புதிய தேடல்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : புரிதல் ஏற்படும்
சுவாதி : துரிதத்துடன் செயல்படுவீர்கள்
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்

விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களே!

நண்பர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும்.

வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : தெளிவுகள் ஏற்படும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான சில ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூக கல்விகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்

மகரம்

மகர ராசி அன்பர்களே!

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள்.

அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அசதிகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!

சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த முயற்சிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

அவிட்டம் : பயணங்கள் மேம்படும்.
சதயம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூரட்டாதி : கருத்துவேறுபாடுகள் குறையும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வர்த்தக துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.

பஞ்சாங்கம்

நாள் செவ்வாய்க்கிழமை
திதி துவாதசி காலை 11.09 வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்
உத்திராடம் மாலை 5.11 வரை பிறகு திருவோணம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம் காலை 10.30 முதல் 11.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் மிருகசீரிடம் மாலை 5.11 வரை பிறகு திருவாதிரை
சூலம் வடக்கு
பரிகாரம்