இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 01.07.2024 | Today Weather News
தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 13cm , திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் 5cm மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 39.6 degree செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் நாமக்கலில் 20 degree செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்ப்ககுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் சூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 degree செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 degree செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளின், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.
லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.