இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 03.07.2024 | Today Weather News
தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி & கோயம்புத்தூரில் 2cm மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 38.8 degree செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை நாமக்கலில் 20 degree செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 degree செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 degree செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளின், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்