இன்றைய முக்கிய செய்திகள் | Today’s Top News 27.5.2024
புதுச்சேரியில் பிரபல திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதற்காக தற்போது கோட் படம் முடிவடைய உள்ள நிலையில் பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற சண்டை காட்சியில் ஒரு கார் மற்றொரு கார் மீது விழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
புதுச்சேரியில் குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஊழல் செய்யும் நகராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி திமுக வலியுறுத்தி உள்ளது
புதுச்சேரி..வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ கடும் வாக்குவாதம்…வட்டாட்சியர் அலுவலகங்களில் வருமானம், ஜாதி உள்ளிட்ட சான்றிதழ் வாங்க மாணவர்களும் பெற்றோரும் கடந்த 15 நாட்களாய் அலைகின்றனர்.இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தியும் போதிய ஊழியர்கள் இல்லாததால் சான்றிதழ் வழங்கும் பணி தாமதமாகிறது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென சென்றுமாணவர்களை அலைகழிக்காமல் உடனடியாக தேவைப்படும் சான்றிதழை வழங்குமாறு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது..
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புனித அமல அன்னை ஆலயத்தில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி திண்டிவனம் ராமதாஸ் நகரில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆரம்பிக்கப்பட உள்ள மினரல் வாட்டர் கம்பெனியின் அனுமதி ரத்து செய்யவில்லை என்றால் நீதி மன்றத்தை நாடுவோம் – திண்டிவனத்தில் முன்னாள் சட்டமன்ற கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம்..உறுப்பினர் ராமமூர்த்தி பேட்டி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இராட்டினமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா காலை 8 மணி முதல் வெகு விமர்சையாக நடைபெற்றது..இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களிருந்தும் ஆந்திரா கேரளா மாநிலங்களிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் துள்ளி குதித்து ஓடிய காளைகளை உற்சாகமாக காளைபிடி வீரர்கள் பங்கேற்று உற்சாகப் படுத்தினார்கள்..
மயிலாடுதுறை மாவட்டத்தில்’ வாரிசுகள் வெளியூர் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில் மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் காவல்துறை, மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் புதுமையான நடவடிக்கை பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது