இன்றைய முக்கிய செய்திகள் 07.06.2024
1, கோயம்புத்தூரில் இருந்து தேவகோட்டை நோக்கி நேற்று இரவு 11:00 மணி அளவில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயனிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது திண்டுக்கல் நத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தரும் ஒளிரும் பட்டைகள் ஏதும் இல்லாததால் நடுவே உள்ள தடுப்பு மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் ஒருவர் காயம் – பஸ்லிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்
2, பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் திருவக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு எங்கள் ஊராட்சியில் தெருமின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, வடிகால் வாய்க்கால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி தலைவர் மோகனா ராமச்சந்திரனிடம் சென்று சென்று கேட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் எங்களுக்காக எதுவுமே செய்ய மறுக்கிறார். இதனால் அடிப்படை வசதிகள் இன்றி நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்
3, விழுப்புரம் அருகேயுள்ள வையலாமூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்றரை லட்சம் வீட்டு பத்திரத்தினை வைத்து கடன் பெற்ற டைலர் இரண்டு மாதம் தவனை செலுத்தாதல் டைலரையும் மனைவியையும் வீட்டிலிருந்து வெளிதள்ளி நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து கந்தவேலு கானை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை செய்து வீட்டின் கதவை திறக்க கூறியதை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு பிறகு நிதி நிறுவன ஊழியர்கள் கந்தவேலுவின் வீட்டின் கதவை திறந்து விட்டனர்.
4, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த UL 131 விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது.ரூ 43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழனி அருகே விவசாய நிலத்தில் நுழையும் காட்டுயானைகளை வெளியேற்ற கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6, திருச்சிராப்பள்ளி மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கும், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.
7, மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் :-
8, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் பகதூர்சேட் ஏற்பாட்டில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவை கொண்டாடும் வகையில் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் உள்ள பறவைகள் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
9, விழுப்புரம் திண்டிவனதில் நீட் மதிப்பெண் குளறுபடிகள்: பயனற்ற நுழைவுத்தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை.2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
10,மதுரையில் இடியுடன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரை மோட்டார் மூலம் நீரை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
11, திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள், உளுந்து பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.