in ,

இன்றைய முக்கிய செய்திகள் 08.06.2024


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் 08.06.2024

 

1, புதுச்சேரி பாரதி ஜனதா படுதோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தலைவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேட்டி.

2, தஞ்சாவூர் கும்பகோணம் திரையரங்கில் தவறவிட்ட நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு நகையை எடுத்து காவல்துறையிடம் கொடுத்த நபருக்கு காவல்துறை பாராட்டு.

3, புதுச்சேரியில் சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் புதுச்சேரியில் ஆலோ சனை வழங்கினார்.

4, இல்லத்தில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் முதல் முதல்வர் நாராயணசாமி, மத்தியில் அமைய உள்ள மோடியின் ஆட்சி குறை பிரசவ ஆட்சி,5 வருடம் நீடிக்காது,கூட்டணி கட்சிகளே மோடியை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆரூடம் நிதிஷ்குமார்,சந்திரபாபு நாயுடு மோடியின் சர்வாதிகரத்தை ஏற்ற கொள்ளமாட்டார்கள் எனவும் விமர்சனம் நமச்சிவாயம் செல்லாக்காசு சூடு சொரானை இருந்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல்

5,திருச்சில் நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்ப துதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு – தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி.

6, திருச்சியில் திமுக ஆட்சியில் விளையாட்டுப் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பிளக்ஸ் போர்டு- கொதித்த அமைச்சர் நேரு- போட்டி நிறுத்தம்

7, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு மலையடிவார கிராமங்களில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க தீவிர முயற்சி.

8, திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு விழா மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.கூட்டத்தில் அதிக வாக்குகள் பெற்ற தெற்கு மாவட்ட செயலாளாருக்கு பத்து பவுன் தங்கச் செயினை அணிவிப்பேன் என மேடையில் பேசிய பொழுது அமைச்சர் மகேஸ் எழுந்து நின்று கைகூப்பி நன்றி தெரிவித்தார். அவர் மைனர் ஆக இருப்பதால் அவருக்கு மைனர் செயின் போடப்படும் என அமைச்சர் நேரு பேசிய பொழுது அமைச்சர் இருவரும் மேடையில் உள்ளவர்களும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர்.

8, தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தில். ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் கடும் அச்சம். வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

10, திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் இல்லம் உள்ளது. இல்லத்திற்கு முன்னதாக 50க்கும் மேற்பட்ட கணினி பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

11, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் வீடுகட்ட வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ளுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

12, கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.

13,மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கும், அரசு பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்:-

14, திண்டுக்கல் பழனி அருகே வெண்டைக்காய் விளைச்சல் அதிகமாக இருந்தும் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதால், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

15,திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டியில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான ஆடுகள்.

16,மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென் கரையில், மறைந்த பழம்பெரும் நடிகர் TR மகாலிங்கம் இல்லத்தில் நடைபெறுகிற நூற்றாண்டு விழா குறித்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

17,துரோகம் செய்து விட்டீர்கள் டெபாசிட் கூட சில இடங்களில் இழந்துவிட்டோம் என கே பி முனுசாமி மற்றும் ஜெயக்குமார் குறித்து அவதூறாக பேசிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக தொண்டர்

18,மதுரை குட் ஷெட் தெருவில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.அரசு பள்ளிகளில் படிக்கும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் சிறப்பு கண் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிப்பதாக தனியார் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சிபு வர்க்கீ மதுரையில் பேட்டி.

19 , திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தமிழக அரசின் சார்பில் இலவச கழிப்பிடங்கள் தங்கும் அறைகள் கட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதர் ஆய்வு.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் TR மகாலிங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் அளித்த மனு