in

சுட்டெரிக்கும் வெயிலால் மிகவும் குறைந்த அளவில் வரும் நீரில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


Watch – YouTube Click

சுட்டெரிக்கும் வெயிலால் மிகவும் குறைந்த அளவில் வரும் நீரில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

 

குடிநீர் தேடி வன விலங்குகள் கும்பக்கரை அருவி பகுதிகளுக்கு வரும் சூழல் உள்ள போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக முற்றிலும் மழைப்பொழிவு இல்லாத நிலையில் அருவிக்கு முற்றிலும் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் முற்றிலும் குறைந்த அளவு வரும் நீரில் பல மணி நேரம் காத்திருந்தும், அருவிப் பகுதிகளில் தேங்கிய தேங்கிய நீரில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும்ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் முற்றிலும் நீர் வறண்டு காணப்படும் நிலையில், காட்டு மாடு, காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளான அருவிப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு குடிநீர் தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இது போன்று நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.

ஆனால் தற்பொழுது சுற்றுலா பயணிகளிடம் கீழ வடககரை ஊராட்சி சார்பாக வாகனங்களுக்கான கட்டணமும், வனத்துறையினரின் சார்பாக குளிக்க வரும் நபர்களுக்கு தனித்தனி நபர்களுக்கு கட்டணம் வசூலித்தும் அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து குளிக்க முடியாத நிலையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது ஏன் என்பது சுற்றுலாப் பயணிகளின் கேள்வியாக உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இந்து திருமணம் செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி

நடிகர் சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் கைதானவர் சிறையில் மரணம்